மனித கழிவை அகற்றும் இயந்திர முறையை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மனித கழிவுகளை அகற்றும் இயந்திரம் வரப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை தமிழகத்தில் முதல்முறையாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், அந்த தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம். pic.twitter.com/p6cbktKLBF
— Udhay (@Udhaystalin) June 20, 2021
இதுகுறித்து தனது பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என தேர்தல் கூறியிருந்தோம். இதன்படி இயந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன் முறையாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.