Categories
அரசியல் மாநில செய்திகள்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும்…. அவலநிலை முற்றிலும் ஒழிக்கப்படும் – ஸ்டாலின் உறுதி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தி விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நீர்வளம் கல்வி மற்றும் சுகாதாரம், சமூக நீதி குறித்த ஏழு துறைகள் மிகவும் முக்கியமானவை .

இந்த துறைகளை சீரமைப்பது முதல் பணி என்றும், தமிழகத்தின் பசுமைப் பரப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி, பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைக்கப்படும் என்றும் குறையாத தண்ணீர் அனைவருக்கும், உயர்கல்வி, உயர்ந்த மருத்துவ படிப்பு, ஊரக கட்டமைப்பு தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைதொகை வழங்கப்படும், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை முற்றிலுமாக ஒலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |