ரோட்டில் கீழே விழுந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மினி ஆட்டோ டிரைவரை போலீஸார் பாராட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு மினி ஆட்டோ வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரமோகன் அவிநாசி தாலுகா அலுவலகம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரது வாகனத்திற்கு முன்பு பல இருசக்கர வாகனங்கள் அவிநாசி வடக்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தன.
அப்போது அங்கு சென்ற ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக பணகட்டு ரோட்டில் கீழே விழுந்து விட்டது. இதனை பார்த்த சந்திரமோகன் உடனடியாக அந்த பணத்தை எடுத்து பார்த்தபோது அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்ததை கவனித்துள்ளார். இதனையடுத்து அவிநாசி காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ரோட்டில் கிடந்த பணத்தை ஒப்படைத்துள்ளார். இதனால் அவிநாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் ரோட்டில் கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சந்திரமோகனை பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.