உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் ஒரு பிரபலமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் டெங்கு நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த டெங்கு நோயாளிக்கு ரத்த பிளாஸ்மாவிற்கு பதில் ஆரஞ்சு பழச்சாறை ஏற்றியுள்ளனர். அதாவது ரத்த வங்கியில் பிளாஸ்மா என்று கூறி கொடுத்த பாக்கெட்டில் ஆரஞ்சு பழச்சாறு இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தற்போது பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை செயல்படும் பகுதியில் மனிதாபிமானமானது செத்துவிட்டதாக உறவினர்கள் கூறும் நிலையில், ஜால்வா பகுதியிலும் ஒரு நோயாளிக்கு ரத்த பிளாஸ்மாவிற்கு பதில் ஆரஞ்சு பழச்சாறு ஏற்றப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நோயாளியும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இந்த 2 சம்பவங்கள் குறித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
प्रयागराज में मानवता शर्मसार हो गयी।
एक परिवार ने आरोप लगाया है कि झलवा स्थित ग्लोबल हॉस्पिटल ने डेंगू के मरीज प्रदीप पांडेय को प्लेटलेट्स की जगह मोसम्मी का जूस चढ़ा दिया।
मरीज की मौत हो गयी है।
इस प्रकरण की जाँच कर त्वरित कार्यवाही करें। @prayagraj_pol @igrangealld pic.twitter.com/nOcnF3JcgP
— Vedank Singh (@VedankSingh) October 19, 2022