பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு சோசியல் மீடியாவில் இரண்டு மாதம் வரை ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. அதன் பிறகு நடிகை மகா மற்றும் ரவீந்தர் இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்தன. இந்நிலையில் ரவி-மகா ஜோடிக்கு திருமணம் ஆகி தற்போது 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதால் ரவீந்தர் அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் 100 நாட்கள் முடிவடைந்து விட்டது. இதற்கு ஏதாவது ஒரு நல்ல தலைப்பை எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் எழுத முடியவில்லை. இன்னும் 30 வருடங்கள் சென்றாலும் கூட இந்த 100 நாட்கள் வாழ்க்கையை மறக்க முடியாது. இந்த 100 நாட்களில் மகிழ்ச்சியாகவும், உங்களால் வேடிக்கையாகவும் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.மேலும் 10 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரவி-மகா ஜோடி இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram