Categories
உலக செய்திகள்

உக்ரைனில் படித்த மாணவர்கள்…. கல்வியை தொடர வாய்ப்பு… ஹங்கேரி அரசின் அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஹங்கேரியில் தங்கள் படிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13ம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அந்நாட்டில் வசித்த பிற நாட்டு மக்கள்  லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் போரில் உயிர் தப்பிய 400-க்கும் அதிகமான நைஜீரியாவை சேர்ந்த மக்கள், விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்தியாவில் ஆபரேஷன் கங்கா என்று திட்டப்படி நேற்று ஒரே நாளில் 7 விமானங்கள் மூலமாக 1250 இந்தியர்கள் நாடு திரும்பி இருக்கிறார்கள் இதன் மூலம் மொத்தமாக சுமார் 22 ஆயிரம் இந்திய மக்கள் உக்ரேனில் இருந்து நாகரத்தினம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஹங்கேரியின் புவிசார் அரசியல் மைய தலைவர் அட்டிலா டெம்கோ, உக்ரைனில் நடக்கும் போரில் தப்பிச்சென்ற பிற நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பல்கலைகழகங்களில் படிப்பை தொடருவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |