Categories
உலக செய்திகள்

“உலக அளவில் பட்டினி குறியீட்டு பட்டியல்!”.. மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா.. ஆபத்தான நிலையில் குழந்தைகள்..!!

உலக நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடுகள், பட்டினி போன்றவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனி நாட்டின் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பு இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஐந்து வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் உயரத்துக்கு தகுந்த எடையின்றி இருக்கிறார்கள்.

மேலும் வயதுக்கு தகுந்த உயரமின்றி இருப்பது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது  ஆகியவற்றின் அடிப்படையில்  இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலில் மொத்தமாக 116 நாடுகள் இடம்பெற்றிருக்கிறது. இதில் இந்தியா 101 ஆவது இடத்தில் இருக்கிறது.

பக்கத்து நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தானை காட்டிலும் இந்தியா பின் தங்கியிருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடத்தில் 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரேசில், குவைத் மற்றும் சீனா உட்பட 18 நாடுகளில் பட்டினி குறியீடு 5 க்கும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயரத்திற்கு தகுந்த எடையின்றி குழந்தைகள் இருப்பது 17.3% அதிகரித்துள்ளது. இந்திய நாட்டில் பட்டினிக்கான அளவு ஆபத்தான அளவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |