உணவு சமைக்க நேரமானதால் மருமகளை மாமனார் கொன்ற துயரம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் திடவுரி பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் அவரது மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று எனக்கு அதிகமாக பசி இருந்ததாகவும் , என்னுடைய மருமகளிடம் எனக்கு உணவு செய்து தருமாறும் கேட்டேன். மேலும் அதிகநேரம் ஆகியதால் சமயலறைக்கு சென்றேன். அவனால் உணவு தயாராகவில்லை. இதையடுத்து சமையல் செய்ய உனக்கு இவ்வளவு நேரமா ? என்று கேட்டு மருமகளிடம் சண்டையிட்ட்டேன்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகமானதால் கழுத்தை நெரித்து கொன்றதாக இவர் போலீசில் தெரிவித்துள்ளார். இவரின் மகன் கூறும்போது , திருமணம் முடிந்த இதிலிருந்தே வரதட்சணை தொடர்பாக எனது தந்தைக்கும் , எனது மனைவிக்கும் தகராறு இருந்ததாகவும் , எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து செய்து வைக்கப் போவதாக என்னுடைய தந்தை அடிக்கடி என்னிடம் கூறி வந்ததாகவும் தெரிவித்தார். இந்த உணவு தயாரிக்க அதிக நேரமானதால் மருமகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.