Categories
தேசிய செய்திகள்

பசியால் தவித்த சாலையோர குழந்தைகள்… தாயுள்ளத்தோடு உணவிட்ட காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

ஹைதராபாத் மாநிலத்தில் ஊரடங்கில் உணவின்றி தவித்த பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு தனது உணவை வழங்கியுள்ளார் போக்குவரத்து காவலர் மகேஷ்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சாலையில் வசிப்பவர்கள் பெறும் இன்னலை சந்தித்து வருகின்றனர். ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். ஹைதராபாத் மாநிலத்தில் சாலையில் உணவின்றி தவித்த பிச்சையெடுக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தனது டிபன் பாக்ஸில் இருக்கும் உணவை அன்புடன் போக்குவரத்து காவலர் மகேஷ் என்பவர் வழங்கியுள்ளார். அந்த உணவை குழந்தைகளுக்கு தாயுள்ளத்தோடு உணவளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது “நான் இதே பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த குழந்தைகளை அடிக்கடி பார்ப்பேன். அவர்கள் உணவின்றி தவிக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். அதனால் எனது உணவை அவர்களுக்கு கொடுத்தேன். உணவு உண்ட பிறகு குழந்தைகள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் கூற முடியாது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதையடுத்து இவருக்கு அனைவரும் தங்களது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |