Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மான்களை வேட்டையாடி… இறைச்சி விற்ற மர்ம நபர்கள்… ஒருவரை கைது செய்த வனத்துறையினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மான்களை வேட்டையாடி விற்பனை செய்த நபர்களில் ஒருவரை கைது செய்த வனத்துறையினர் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து அதனை பயன்படுத்தி புள்ளி மான், மிலா உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சிகளை விற்பனை செய்து வருவது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராஜபாளையத்தில் இருந்து செண்பகத்தோப்புக்கு செல்லும் சாலையில் அனதலை என்ற பகுதியில் வன காவலர்கள் மற்றும் வனவர் குருசாமி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் சந்தேகப்படும்படியாக அவரது பைகளை மறைத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனைப்பார்த்த வனத்துறையினர் அவர்களை நிறுத்தி பைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் மான் இறைச்சி இருந்துள்ளது. மேலும் வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றதில் 4 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அதில் ஒருவரை மட்டும் வனதுறையினர் பிடித்து அவரிடம் விசாரித்ததில் அவர் சுந்தரநாச்சியார் புரத்தை சேர்ந்த காசிராஜன்(40) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மான்களை வேட்டையாடி அதனை விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. இதனால் காசிராஜனை கைது செய்த வனத்துறையினர் தப்பி ஓடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |