Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாதத்தையொட்டி…. ஆஞ்சநேயர் கோயில்களில்…. சிறப்பு வழிபாடு….!!!!

ஆஞ்சநேயர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியே வழிபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. இந்த சிறப்பு வழிபாட்டில் சீதா, ராமன், லட்சுமணன், அனுமன், விக்னேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே வழிபட்டனர். இதே போல் நீடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் 33 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் ஆலங்குடியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |