Categories
உலக செய்திகள்

பயங்கரமாக வீசிய “அர்வென்” புயல்…. பிரபல நாட்டில் 2 பேர் பலி…. அதிகாரிகளின் பரபரப்பு தகவல்….!!

பிரித்தானியாவை தாக்கிய அர்வென் புயலால் 2 பேர் பலியாகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பிரித்தானியாவில் பல பகுதிகளையும் அர்வென் புயல் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதாவது மணிக்கு 90 மைல் ( 144 km/h ) என்ற வேகத்தில் வீசிய அர்வென் புயல் காற்றால் பிரித்தானியாவில் சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு வடக்கு அயர்லாந்தின் Antrim கவுண்டி என்ற பகுதியில் திடீரென வீசிய பலத்த காற்றால் கார் ஒன்றின் மீது மரம் சாய்ந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும் லான்காஸ்டரை சேர்ந்த ஒருவர் இரவு 11 மணி அளவில் Ambleside-ல் சென்று கொண்டிருந்த நிலையில் மரம் ஒன்று விழுந்ததில் பரிதாபமாக இறந்துள்ளார். இதற்கிடையே அதிகாரிகள் பலரும் Northumberland, Tyne and wear, County Durham உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மின்வெட்டு காரணமாக சுமார் 55,000 வீடுகளில் மக்கள் அவதிப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |