Categories
மாநில செய்திகள்

மேற்கு வங்கத்தில் கரையை கடக்க தொடங்கிய ஆம்பன் புயல்…. ஒடிசாவில் சூறாவளிக் காற்றுடன் கன மழை!

அதி தீவிர புயலாக உள்ள ஆம்பன் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் மணிக்கு 27 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா இடையே சந்தர்வன் வனப்பகுதியை ஒட்டி புயலில் முகப்பு பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க 4 மணி நேரம் ஆகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. பாராதீப் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 102 கி.மீ. வேகத்தில் வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் கடற்கரை மாவட்டமான பட்ராக்கில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆம்பன் புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 19 மீட்பு படைகள், தெற்கு பர்கானா மாவட்டத்தில் 6 மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |