வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்நிலையில் மத்திய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பலத்த காற்று வீசும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது