Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தில் என்னால் மனைவியுடன் இருக்க முடியவில்லையே… மனமுடைந்து கணவர் எடுத்த விபரீத முடிவு..!!

பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க முடியாத வருத்தத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்கி. இவர் தனியார் சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகின்றார். சென்ற வருடம் விக்கிக்கும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரோஜா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானதால் தாய் வீட்டிற்கு சென்றார். சில தினங்களில் குழந்தை பிறக்கப் போவதாக விக்கிக்கு ரோஜாவின் தாய் அலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார். பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை உருவாக சென்னை செல்வதற்கு இ-பாஸ் பதிவு செய்தார் ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார். முதலாம் ஆண்டு திருமண நாள் வரும் நிலையில் அன்றாவது மனைவியுடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் ரோஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை ரோஜாவின் கணவர் விக்கிக்கு தெரிவிக்க குடும்பத்தினர் போன் செய்துள்ளனர். ஆனால் விக்கி போனை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து விக்கியின் நண்பர்களுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நண்பர்களிடம் தெரிவிக்க வீட்டிற்கு வந்த போது விக்கி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் விக்கியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களிடம் விசாரிக்கையில் பிரசவத்தின்போது கணவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் என ரோஜா ஆசையாக சொல்லிக்கொண்டே இருந்தார் என்பதும் அதனை நிறைவேற்ற முடியாத சோகத்தில் விக்கி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது

Categories

Tech |