Categories
உலக செய்திகள்

இறந்த மனைவியின் சடலம்…. குளிப்பாட்ட மறுத்த பெண்கள்… கணவன் கூறிய பகிர் காரணம்…!!

வாழ்கை சலித்ததால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சுத்தியலால் தலையை உடைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எகிப்தில் இருக்கும் சிவா என்ற கிராமத்தை சேர்ந்த கயானா என்ற நபர் தனது மனைவியை தூங்கும் நேரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார்.இஸ்லாமியர்களின் முறைப்படி இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது சில மணி நேரம் சடலத்தை குளிப்பாட்டுவது வழக்கம். இதற்காக கயானா கிராமத்தில் இருந்த சில பெண்களை தனது மனைவியை குளிப்பாட்டுவதற்கு அழைத்துள்ளார்.

ஆனால் அந்தப் பெண்களோ சடலத்தின் தலையில் ரத்த காயம் இருந்ததை கவனித்த பின்னர் சுகாதார அதிகாரியின் அனுமதி இல்லாமல் சடலத்தை எங்களால் குளிப்பாட்ட முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அவர்கள் சுகாதார அதிகாரி வரவழைத்து இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் கயானாவிடம் விசாரணை மேற்கொள்ள, அவர் தனது மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. அதோடு நடந்த அனைத்தையும் காவல்துறையினரிடம் அவரே ஒப்புக்கொண்டார். கொலைக்கான காரணம் மனைவியுடன் வாழ்ந்து சலிப்பு ஏற்பட்டுவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். பாரம்பரியமாக வாழ்க்கை நடத்தி வரும் கிராம மக்களுக்கு இச்சம்பவம் மிகவும் கொடூரமாக இருந்தது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |