Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய தம்பதிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த கணவன் – மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனாம்காரியந்தல் கிராமத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின் வீட்டின் பின்புறம் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன் எரிசாராயம் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வடிவேலு மற்றும் அவரின் மனைவியான ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த எரிசாரயம் விற்பனைக்கு உடந்தையாக இருந்த சண்முகம் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |