Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீரா வயிற்று வலி” கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை….. அனாதையான 1 1/2 வயது பெண்குழந்தை…. திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் மனைவி இல்லாத ஏக்கத்தில் கணவன்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நாடார்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பவித்ரா கடந்த சில மாதங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், அவரது வயிற்று வலி குறைந்தபாடில்லை. இதனால் வலி தாங்க முடியாத அவர் ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அதிகாரிகள்  பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்கள் துணையுடன் அவரது உடல் கணவரால் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின் வீட்டிற்கு வந்த அவர் மனைவி இல்லாத துக்கத்தில் மனமுடைந்து நேற்று முன்தினம் அவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது கணவன் மனைவி இருவரும் குழந்தையை தனியாக தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |