Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

55 ஆண்டு கால திருமண வாழ்வு…. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாத்தூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் காதலித்து சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக சுப்பிரமணிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனால் சுப்பிரமணியனின் உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்த சரோஜா அவரை பார்த்து கதறி அழுதபடியே மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அதன் பிறகு கணவன் மனைவி இரண்டு பேருக்கும் அவர்களது உறவினர்கள் இறுதி சடங்கு செய்து இருவரையும் ஒன்றாக அடக்கம் செய்துவிட்டனர். இவ்வாறு கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |