Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறப்பை தாங்க முடியாமல்… கதறி அழுதபடி விழுந்த மனைவி… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கணவன் இறந்த துக்கத்தில் கதறி அழுதபடி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் சீனிவாசன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது தெரிய வந்தவுடன் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் கணவன் இறந்த துக்கத்தில் கதறி அழுத ருக்மணி திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ருக்மணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |