கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் அய்யாசாமி என்ற பால் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், 5 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அய்யாசாமி திடீரென தனது வீட்டில் உயிரிழந்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து கதறி அழுத மரகதம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டார். அதன் பின் உறவினர்கள் இரண்டு பேரின் உடல்களையும் நல்லடக்கம் செய்துள்ளனர். இவ்வாறு கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.