மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி இருவரும் சாம்பல் பள்ளத்தில் இருக்கும் முனியப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் காமன்தொட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த கார் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று இருவரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான வீரமணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.