சுவிட்சர்லாந்தில், வீட்டின் ஜன்னல் வழியே தடுமாறி விழுந்த கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் கீழே விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள Emmenbrücke என்ற பகுதியில் நேற்று பகல் நேரத்தில் வீட்டிலுள்ள ஜன்னலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 79 வயது முதியவர், கால் தவறி ஜன்னல் வழியே கீழே விழுந்திருக்கிறார். எனவே அவரை காப்பாற்றுவதற்காக அவரின் மனைவி சென்றபோது அவரும் ஜன்னல் வழியே கீழே விழுந்து விட்டார்.
இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது, அவர்கள் இறந்தது விபத்து என்று தெரியவந்துள்ளது. எனினும் இச்சம்பவம் குறித்து, வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.