Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னை அடிச்சிட்டாரு” பெண் அளித்த புகார்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பட்டி கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த செல்வகுமார் காமாட்சியை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் காயமடைந்த காமாட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |