லாரி மீது எதிர்பாராமல் கார் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஜீவன் பீமா நகர் எல்.ஐ.சி காலனி பகுதியில் அனில்வாலியா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலதிபரான இவர் பெங்களூருவில் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மஞ்சுவாலியா என்ற மனைவி இருந்துள்ளார். அதன்பின் பெங்களூருவில் இருந்து அனில்வாலியா மற்றும் அவரின் மனைவியும் சொகுசு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது நாட்றம்பள்ளி பகுதியில் சென்ற நிலையில் முன்னால் போன லாரி ஓட்டுநர் திடீரென நிறுத்தியதால் இதை அனில்வாலியா கவனிக்காததால் கார் நிற்காமல் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரை ஓட்டிச் சென்ற அனில்வாலியா மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் நித்தியானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.