மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆயுதப்படை காவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் ஆயுத படை போலீசில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திவ்யா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுந்தரபாண்டி திவ்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் திவ்யா திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.