கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் பகுதியில் கலியபெருமாள்-சாரதாம்பால் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென கலிய பெருமாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன மனவருத்தத்தில் மனைவியான சாரதாம்பாளுக்கும் உடல்நலக்குறைவு குறைவு ஏற்பட்டது. இதனால் அவரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன்-மனைவி இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கலிய பெருமாளுக்கு திடீரென உடல்நிலை மோசமாகி அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் சாரதாம்பாளுக்கு தெரிவிக்காமல் கலியபெருமாளின் உடலை நல்லடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாரதாம்பாள் ஒரு சில வினாடிகளிலேயே தனது உயிரை விட்டுள்ளார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கலியபெருமாளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே சாரதாம்பாளையும் நல்லடக்கம் செய்துள்ளனர். தனது கணவர் தன்னை விட்டு சென்ற சென்று விட்டார் என்ற ஏக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.