Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காட்டிக்கொடுத்த 10 ரூபாய் நோட்டு… தம்பதியினரின் தில்லு முல்லு வேலை… சென்னையில் பரபரப்பு…!!

பக்கத்து வீட்டில் திருடிய கணவன் மனைவி இருவரும் பத்து ரூபாய் நோட்டால் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துரையின் தாயார் இறந்து விட்டதால் தனது வீட்டு சாவியை பக்கத்து வீட்டில் இருக்கும் நந்தினி என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 கிராம் வெள்ளி கொலுசு, 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 84 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை அறிந்து துரை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் துரை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில் காவல்துறையினரிடம் திருடுபோன 84 ஆயிரம் ரூபாயில் இருக்கும் ஒரு பத்து ரூபாய் நோட்டில் தான் 4500 என எழுதி வைத்திருப்பதாக துரை தெரிவித்துள்ளார். மேலும் அந்த பத்து ரூபாய் நோட்டில் தன்னுடைய கையெழுத்தையும் போட்டு வைத்து இருப்பதாக காவல்துறையினரிடம் துரை தெரிவித்துள்ளார். இந்நிலையில் நந்தினியின் கணவரான உமாசங்கர் என்பவர் அந்த பத்து ரூபாய் நோட்டை கள்ளச்சந்தையில் கொடுத்து மது வாங்கியுள்ளார். அதன் பின் அந்த பத்து ரூபாய் நோட்டு துரையின் நண்பர் ஒருவரிடம் வந்து சேர்ந்ததால் அவர் இது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உமாசங்கரையும், நந்தினியையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் துரை வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |