பாகிஸ்தானில் இளைஞர் ஒருவரை கத்தியால் சரமாரியாக தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள Muzffarghar என்ற கிராமத்தில் வசித்து வந்த Abdul Qayum என்பவரது மனைவிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த Muhammad Akram என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பழக்கத்தால் இருவரும் அடிக்கடி நெருங்கி பேசி வந்துள்ளனர். இதையறிந்த Abdul Qayum-க்கு பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வியாழக்கிழமை அன்று Abdul Qayum தனியாக நடந்து சென்று கொண்டிருந்த Muhammad Akram-ஐ தனது நண்பர்களுடன் சென்று சரமாரியாக தாக்கியதோடு, காது மற்றும் மூக்கை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதனால் Muhammad Akram வலி தாங்க முடியாமல் துடி துடித்தபடி கிடந்துள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவர்கள் Muhammad Akram ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே Abdul Qayum-ஐ காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.