கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் அழகுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரின்டிங் பிரஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியான சித்ரா வங்கி இ-சேவை மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் 2-வது மனைவி கவிதா காவல்நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகுவேல் தனது முதல் மனைவியான சித்ரா மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தனர். பின்னர் திடீரென சித்ரா முகம் உள்பட பல இடங்களில் காயங்களுடன் வீட்டின் அருகாமையில் சடலமாக கிடந்துள்ளார்.
பின் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தற்போது தகவல் பரவி வருகிறது. இதுபற்றி சித்ராவின் தந்தை சின்னசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் சந்தேகத்தின் பேரில் அழகுவேலை பிடித்து விசாரணை நடத்தியதில் தன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, எனது உறவினர் பெண்ணுக்கும் வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. பிறகு எனது மனைவி சித்ராவும் அந்த வாலிபருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்திருக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் அவர்கள் பேசிய ஆடியோவை எனது மகன் தனுஷ் காண்பித்தான். இது தொடர்பாக நான் சித்ராவை கண்டித்த போது அவர் அதைக் கேட்கவில்லை.
பின்னர் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற சித்ரா நீண்ட நேரமாகியும் திரும்ப வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த நான் வீட்டின் அருகாமையில் சென்று பார்த்த போது அவர் தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தார். அதனைப் பார்த்த நான் அருகில் செல்லும் போது கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அதற்குப் பிறகு சித்ராவை நான் தலையை பிடித்து தரையில் அடித்து அமுக்கி கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அழகுவேலை கைது செய்துள்ளனர்.