கணவன் புது போன் வாங்கி கொடுக்க அதை வைத்து இரவும் பகலும் கேம் விளையாடிய பெண் சார்ஜ் போட்டுக்கொண்டு கேம் விளையாடியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அதுவும் இப்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வீட்டில் பொழுது போக்குவதற்காக எந்நேரமும் மொபைல் போனை பயன்படுத்தி கொண்டு உள்ளனர். ஆன்லைனில் கேம் விளையாடுவது தற்போது பிரபலமாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் சில உயிரிழப்புகளும் நேர்ந்து வருகின்றது.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்த 54 வயதான பெண் ஒருவருக்கு அவரது கணவர் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனில் அப்பெண் அதிக நேரம் கேம் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டு ஆன்லைனில் கேம் விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தயவு செய்து செல்போனை சார்ஜ் செய்து கொண்டு யாரும் கேம் விளையாடாதீர்கள்.