Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முதலிரவில் நடந்த கொடூரம்! மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை.!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த 25 வயதான நீதிவாசன் என்பவருக்கும் சடையங்குப்பத்தை சேர்ந்த 20 வயதான சந்தியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் எளிமையான முறையில் நேற்று வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது.

புதுமணத் தம்பதிகளுக்கு பெற்றோர்கள்  நல்ல நேரம் பார்த்து சாந்தி முகூர்த்தம்  ஏற்பாடு செய்திருந்தனர். பல கனவுகளோடு வாழ்க்கையை தொடங்க எண்ணி முதலிரவு அறைக்குள் நுழைந்தார் சந்தியா. பின்னர் நீதிவாசனும், சந்தியாவும்  பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கணவன் நீதிவாசன்,  அறையை விட்டு வெளியே வந்து வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்து  சந்தியாவை காட்டுமிராண்டிதனமாக தாக்கியுள்ளார்.

இதில் சந்தியாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அங்கிருந்து  நீதிவாசன் தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த சந்தியா சிறிது நேரத்திலேயே  உயிரிழந்துள்ளார். இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்    இறந்த சந்தியாவின் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் தப்பியோடிய புது மாப்பிள்ளை நீதிவாசனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அருகே உள்ள தோப்பில் வேப்பமரத்தில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் அங்கு  சென்று பார்த்தனர். அது நீதிவாசன் என்பதை உறுதி செய்து அவர் உடலையும்  உடற்கூறாய்விற்காக  அனுப்பினர்.

‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்பது போல இந்த சம்பவத்தால் இருவரது வாழ்க்கையும்   முடிந்து போனது இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்திற்காக  இச்சம்பவம் நடந்தது  என்பது மர்மமாக உள்ளது.

Categories

Tech |