Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (53). இவருக்கு ஜெயபதி (48) என்ற மனைவியும் ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

இதனை, அவரது மனைவி ஜெயபதி அடிக்கடி கண்டிக்க, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் விஜயகுமார் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஜெயபதி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விஜயகுமார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சார்பு ஆய்வாளர் மீனாகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |