கணவன் துன்புறுத்தியதால் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்தவர் சேர்மலை சுருளியம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்துள்ளனர். மகன்கள் இருவரும் வெளியூரில் ஜேசிபி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வர மகள் காதல் திருமணம் செய்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சேர்மலை தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுருளியம்மாள் கணவனை தாக்கியுள்ளார். சுருளியம்மாள் தாக்கியதினால் சேர்மலை மயங்கி விழுந்துள்ளார். இதனால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கடமலைக்குண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சேர்மலையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சேர்மலை. அவர் மரணமடைந்ததை தொடர்ந்து சுருளியம்மாளை காவல்துறையினர் கைது செய்தனர்.