Categories
தேசிய செய்திகள்

கணவர் வீட்டின் முன் விஷம் குடித்த மருத்துவர்…”தொடையில் எழுதியிருந்த பெயர்கள்”… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கணவனின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் தனது தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று தொடையில் எழுதி வைத்துள்ளார்.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிதேந்திரா பட்டேல், மருத்துவராகப் பணி புரியும் ஹர்ஷா படேல் என்ற பெண்ணை கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது திருமணம் செய்தார். நேற்று முன்தினம் ஹர்ஷா படேல் தனது கணவர் வீட்டின் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஹர்ஷா தனது வலது தொடையில் தனது கடைசி வாக்குமூலமாக தனது தற்கொலைக்கு கணவன், மாமியார், மாமனார் தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்துள்ளார்.

ஹர்ஷா எழுதிய நீண்ட கடிதம் போலீசாரிடம் சிக்கியது. கணவர் தினமும் மயக்க மருந்து கொடுத்து தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றும், மாமியார், மாமனார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாகவும் அதில் எழுதியிருந்தார். இதனை ஆதாரமாக வைத்து கணவர் ஹிதேந்திரா மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |