பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு உடலில் பிளேடால் கீறி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு பொன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சசிகுமார் வாசுகி தம்பதியினர். இவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாசுகி கணவர் சசிகுமாரை பிரிந்து உறவினர் இருந்து வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த சசிக்குமார் நேற்று முன்தினம் அரிவாளுடன் அங்கு சென்று தனது மனைவியை அழைத்துள்ளார். இதுகுறித்து வாசுகி திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து சசிகுமாரை காவல்துறையினர் அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் வாசுகி அவரது தாய் வீட்டிற்கு செல்ல அதனை அறிந்து கொண்ட சசிகுமார் திருச்செங்கோடு காவல் நிலையம் முன்பு மது போதையில் அமர்ந்து கொண்டு தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி தான் வைத்திருந்த பிளேடால் கழுத்து, மார்பு உள்ளிட்ட உடல் பாகங்களில் வெட்டிக் கொண்டார் இதனால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல் நிலையம் முன்பு உடலில் பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.