Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் கண்முன்னே….. துடிதுடித்து மனைவி மரணம்….. துக்க வீட்டுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்….!!

சென்னை அருகே கண் முன்னே மனைவி துடிதுடித்து இறந்தது கண்டு கணவன் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த கள்ளிக்குப்பம் ஏரியாவில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி தாட்சாயினி உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கும்மிடிப்பூண்டியை அடுத்த சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது செங்குன்றத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்து தட்டியது.

இதில் நிலை தடுமாறி அவர்கள் இருவரும் கீழே விழ தாட்சாயினி லாரியின் டயருக்குள் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்முன்னே மனைவி  துடிதுடித்து உயிரிழந்ததை கண்டு கதறி அழுதுள்ளார் சரவணன். பின் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |