Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவருக்கு வேலையில்லை….. வீட்டில் நிம்மதி இல்லை… மனைவி எடுத்த வீபரீத முடிவு …!!

கணவன் உடனான தகராறு காரணமாக 7 மற்றும் 2 வயது மகன்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிர் பிழைத்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் பிரபு (38). இவருக்கும் பவித்ரா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்சன் (7), லக்ஷன் (2) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

ஊரடங்கு காரணமாக பிரபுவுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த வேலைகளை பார்த்து வந்துள்ளார். வருமானமில்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இன்று காலை பவித்ராவின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டை திறந்து பார்த்தபோது பவித்ரா மற்றும் 2 குழந்தைகள் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

உடனே இது குறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேர்களையும் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே 2 குழந்தைகளும் இறந்து விட்டன. குடும்ப தகராறில் தனது 2 குழந்தைகளுக்கும் பவித்ரா விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

பவித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சின்னமனூர் போலீசார் பவித்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.குடும்பத் தகராறை பேசி தீர்த்துக்கொள்ளாமல் தற்கொலை முடிவெடுத்து ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்டது

Categories

Tech |