Categories
உலக செய்திகள்

“படுகொலை செய்யப்பட்ட கணவர்!”…. இவ்ளோ ஆதாரம் இருந்தும்…. தப்பித்து வரும் குத்துசண்டை வீராங்கனை…!!

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் குத்துச்சண்டை வீராங்கனை, கணவர் கொலை வழக்கில் சிக்கிய நிலையில் தொடர்ந்து மறுத்துவருகிறார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த Viviane என்ற குத்துச்சண்டை வீராங்கனை, தற்போது சுவிட்சர்லாந்தில் தங்கி, குத்துச்சண்டை பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இவரின் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, காவல்துறையினர் Viviane-ஐ கைது செய்தனர். தற்போது விசாரணை கைதியாக இருக்கிறார். இவர் தொடர்ந்து நான் கொலை செய்யவில்லை என்று மறுத்துவருகிறார். எனினும் இவருக்கு எதிரான பல ஆதாரங்களை சேகரித்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

அதாவது, கொலை செய்யப்பட்டவரின் மொபைலில் இவரின் டிஎன்ஏக்கள் இருக்கிறது. மேலும், அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த வீட்டின் மற்றொரு சாவியும் இவரிடம் தான் இருந்துள்ளது. மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பேஸ்பால் மட்டை, என் அம்மா தான் பயன்படுத்துவார் என்று அவரின் மகன் காவல்துறையினரிடம் கூறிவிட்டார்.

எனவே, Viviane தான் அவரின் கணவரை கொலை செய்திருப்பார் என்று ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் நம்புகின்றனர். எனினும், இந்த கொலைக்கு என் கணவரின் நெருங்கிய நண்பர் தான் காரணம் என்று Viviane கூறிக்கொண்டிருக்கிறார். தற்போது வரை காவல்துறையினர் அப்படி ஒரு நபரை அடையாளம் காணவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |