வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவி சுட்டு கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள் டேனியல்-ஏரிகா தம்பதியினர். 2010 ஆம் ஆண்டு சந்தித்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2012ஆம் வருடம் ஏரிகா குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு இருவர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இதனை தொடர்ந்து டேனியல் 2015 ஆம் ஆண்டு வேலா என்ற இளம் பெண்ணை காதலிக்க தொடங்கினார்.
இருவரும் பல இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுக்க, அதனை டேனியல் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனை பார்த்த டேனியலின் முன்னாள் மனைவி ஏரிகா மிகவும் கோபம் கொண்டு 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டேனியல் வீட்டிற்கு சென்றார். அங்கு டேனியல் குழந்தைகளின் ஆபாசப்படங்களை வைத்திருந்ததையும் பார்க்க இவை அனைத்தும் சேர்ந்து அவருக்கு அதிக அளவு கோபத்தை கொடுத்தது.
இதனால் அங்கிருந்த டேனியலின் துப்பாக்கியை எடுத்து கொண்டு கழிப்பறையில் அமர்ந்திருந்த டேனியலை நோக்கி சென்றார். ஏரிகா வைப் பார்த்த டேனியல் உன்னை கொல்ல போகிறேன் என கூறினார். ஆனால் ஏரிகா டேனியலை சுட்டு கொலை செய்தார். இதன் பிறகு காவல்துறையினர் ஏரிகாவை கைது செய்ய, முதலில் தன் மீதான குற்றத்தை மறுத்தவர் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.