Categories
தேசிய செய்திகள்

நண்பர்கள் முன் மதுகுடிக்க வைத்த கணவர்…. மனமுடைந்த மனைவி…. 2 வயது மகனுடன் தற்கொலை….!!

மனைவி ஒருவர் தனது கணவன் நண்பர்கள் முன் அவமானப்படுத்தியதால் தனது மகனுடன் தற்கொலை செய்த்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் பவன் – பிரியங்கா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா தன்னுடைய மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். அப்போது பிரியங்காவின் தந்தை சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அதில், பவனும், அவரின் தந்தையும் சேர்ந்து பிரியங்காவை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர் என்றும், பவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வீட்டில் தன் நண்பர்களை அழைத்து வந்து மது அருந்தியுள்ளார்.

பின்னர் தன்னுடைய நண்பர்கள் முன்னிலையில் தன்னுடைய மனைவியையும் மது அருந்த கட்டாயப் படுத்தி உள்ளார். மேலும் வற்புறுத்தி குடிக்க வைத்திருக்கிறார். இது தொடர்பாக பிரியங்கா- பவன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் நண்பர்கள் முன் தன்னை அவமானப்படுத்துகிறார் என்ற மனவேதனை அடைந்த பிரியங்கா, தனது மகனை தூக்கில் தொங்க விட்டு பிறகு தானும் தற்கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் பவன் மற்றும் அவருடைய தந்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |