Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன் “வேலூரில் அதிர்ச்சி !!..

வேலூர் மாவட்டத்தில் மனைவியை உயிருடன் கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சையது இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் முகமது சையது தனது இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.

இந்நிலையில் ஒருநாள் சண்டை தீவிரமடைய ஆத்திரமடைந்த முகமது தனது மனைவியை தீவைத்து எரித்து தப்பியோடிவிட்டார் அதன்பின் வலி தாங்க முடியாமல் கத்திய  அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகஅனுப்பி வைத்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இதனையடுத்து பேனாராம்பட்டு காவல்துறையினர் முகமது சையது மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வேலூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகமது சையதுக்கு  ஆயுள் தண்டனை வழங்கினார்.

Categories

Tech |