Categories
தேசிய செய்திகள்

கணவனை பழிவாங்க இப்படியா பண்றது… இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம்… அதிர்ச்சியில் உறைந்த கணவன்…!!!

குஜராத் மாநிலத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி அவரின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதையடுத்து கணவனை பழிவாங்க எண்ணிய அவரின் மனைவி கணவனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அவரை மட்டும் தனியாக பிரித்து அதை ஆபாசமாக காட்டி இன்ஸ்டாகிராமில் கணவனின் பெயரில் பல அக்கவுண்டை ஓபன் செய்து அதில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து கணவரின் நண்பர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் அவரது போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உடனே அந்த இளைஞனுக்கு போன் செய்து உன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் அனைத்தும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞன் உடனே இன்ஸ்டாகிராம்க்கு சென்று பார்த்த போது அவரின் பெயரில் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டு அதில் புகைப்படங்கள் அனைத்தும் பதிவு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் தகவல் அளித்தார். தகவலின் பேரில் விசாரணை நடத்தியதில் அவரது மனைவியே இந்த சம்பவம் செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |