Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தகராறை தட்டி கேட்ட கணவன்-மனைவி…. கள்ளக்காதலனின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

தகராறை தட்டிக் கேட்ட கணவன் மற்றும் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அருணா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அருணா தேவிக்கும், செல்வகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அருணா தேவிக்கும் செல்வகுமார் இருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனை பக்கத்து வீட்டில் வசித்து வரும் மருதமுத்து மற்றும் அவரின் மனைவி ரம்யா ஆகிய இருவரும் தட்டிக் கேட்டுள்ளனர்.

அந்நேரம் கோபமடைந்த செல்வகுமார் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த மருதமுத்து, ரம்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்‌. அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் செல்வகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |