Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளிய கணவன்….!!

ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளி கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த அருணும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றம் இருவரும் இணைந்து வாழ கால அவகாசம் கொடுத்ததால், மும்பையில் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை உதறி விட்டு, கணவருடன்  சேர்ந்து வாழ ஆர்த்தி கோவை வந்துள்ளார். மேலும் கோவை வந்த ஆர்த்தியிடம் கணவர் அருண் வரதட்சணை கேட்டு சண்டையிட்டதாக சொல்லப்படுகின்றது.

Image result for ஓடும் காரில் இருந்து

இந்நிலையில் தான் கணவனும் , மனைவியும் துடியலூரில் இருந்து சென்னைக்கு புறப்படலாம் சென்றுள்ளனர் . கணவனின் பேச்சை கேட்டு ஆர்த்தியும் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது  திடீரென ஓடும் காரின் கதவை திறந்த அருண் மனைவி ஆர்த்தியை கீழே தள்ளியுள்ளார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த மனித தன்மையற்ற கொடூர சம்பவம் அங்கில் இருந்த  வீட்டின் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. கீழே விழுந்த ஆர்த்தி காயமடைந்த நிலையில் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை தேடி வருகின்றனர்.

Categories

Tech |