Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மொக்க காரணம்” மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்……. சென்னையில் பரபரப்பு….!!

மொக்க காரணத்திற்க்காக மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ஆன ஜெயராஜும் அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு தான் உறங்கியதும் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக ஜெயராஜ் கதறி அழுதார்.

போலீஸ் விசாரணை :

பின் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து உடலை கைப்பற்றிய சென்னை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இலக்கியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தில் காயங்கள் இருப்பதும் கழுத்தை நெரித்ததற்கான தடங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கணவன் மீது சந்தேகம் :

இந்த சம்பவம் நடந்த அன்று ஜெயராஜ் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்ததால் அவரை பிடித்து விசாரித்ததில் முதலில் கதறி கதறி அழுத அவர் காவல்துறையினரின் திடுக்கிடும் விசாரணையால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வணிக வளாகத்தில் காவலாளி வேலை பார்த்த இலக்கியாவுக்கு இரவு 10 மணிக்குத்தான் பணி முடிவடையும்.

கொலைக்கான காரணம் :

அதன் பிறகு வீட்டிற்கு வந்து அசதியில் சமைக்க முடியாமல் பெரும்பாலான நேரங்களில் கணவருக்கும் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வந்து வைத்து விடுவார் என்று கூறப்படுகிறது. வீட்டில் ஏன் சமைக்கவில்லை என்று கேட்டு ஜெயராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று நடந்த சண்டையின் போது ஆத்திரமடைந்த ஜெயராஜ் இலக்கியாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாட திட்டமிட்டார்.

சிறையில் அடைப்பு:

அதன்படி அவரது கழுத்தில் சுருக்கு போட்டு மின்விசிறியில் மாற்றிவிட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் தற்போது அவரை அடைத்துள்ளனர்.

Categories

Tech |