Categories
தேசிய செய்திகள்

“ஆந்தை” போல் முழித்துக் கொண்டிருந்த கணவர்… 6மாத “புது பெண்ணுக்கு” நேர்ந்த சோகம்… கேரளாவில் பரபரப்பு…!

கேரளாவில் திருமணமான 6 மாதங்களில் கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் என்பவர். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முசிலா என்ற 20 வயதுடைய இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஜாகீர் திருமணத்திற்கு முன்னர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.கொரோனா காரணமாக 8 மாதத்திற்கு முன் கேரளாவிற்கு வந்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் கேரளாவில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். திருமணமான ஆரம்ப கட்டத்திலேயே ஜாகீர் தன் மனைவியின் மீது சந்தேகப்பட்டு உள்ளார். அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு தூக்கமின்றி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் தூக்கம் இல்லாமல் முழித்துக் கொண்டிருந்த ஜாகீர் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

முசிலாவின் அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்து பார்த்த குடும்பத்தார் ரத்தவெள்ளத்தில் கிடந்த முசிலாவை பார்த்து அதிர்ச்சி அடைத்தனர். அதன்பின் அவரை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். முசிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன்பின் போலீசார் குற்றவாளியான ஜாகீரை கைது செய்தனர்.கொலை செய்தது எவ்வாறு என்பது குறித்து ஜாகீர் இவைகள் அனைத்தையும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |