நாகர்கோவில் அருகே உள்ள தூத்தூர் புனித தோமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோபாய். இவரது மகள் ஜாப்லின்(30) இவர் சென்னை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஆர்கே நகரை சேர்ந்த கார்கி(35) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்பு கார்கி தம்பதியினர் தூத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கார்கி அந்த பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் கார்கி பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கார்கி மனைவி போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் கார்கியின் உடலில் பல காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஜாப்லினிடம் விசாரித்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அம்பலமானது. இந்நிலையில் ஜாப்லின் தந்தை அண்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்டு உள்ளது தெரியவந்தது.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஜாப்லின் கூறியதாவது:
திருமணத்துக்கு பிறகு காரிகை என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் செல்போனில் நீண்ட நேரமாக வேறு பெண்களுடன் பேசிகொண்டேயிருப்பார், இதை நான் பலமுறை கண்டித்தேன். சம்பவத்தன்று இரவு அவர் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தார் இதை நான் கண்டித்தேன் இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் என்னை அடித்து துன்புறுத்தினார்.
இது குறித்து எனது பெற்றோரிடம் கூறினேன், உடனே வீட்டிற்கு வந்த தந்தையும் அண்ணனும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் இருவரும் எனது கணவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் இறந்துவிட்டார் இந்த கொலையை மறைப்பதற்காக எனது கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.