தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்கும், அவரது மனைவி லதாவிற்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த ரவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் ரவி அப்பகுதியில் உள்ள கால்வாய் அருகில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையறிந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் ரவியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து கூடலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.