டெல்லியில் ஒரு பவுன்சர் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பானிபட் என்ற பகுதியில் வசிக்கும் 30 வயதான நபர் பவுன்சராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பவுன்சர் சோகத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு மனைவி அவருடன் மீண்டும் சண்டையிட ஆரம்பித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த அவர் மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பின்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து மறுநாள் பவுன்சரின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மருமகள் மற்றும் பேரன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் கணவனே அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரை தேடியபோது அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.